tamilnadu

அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்   

 திருச்சிராப்பள்ளி, செப்,24- திருச்சி மாவட்டத்தில் பணிக்கு செல்லும் மகளிர்(மாற்றுத் திறனாளிகள் உட்பட) மற்றும் திருநங்கைகளுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக, இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கு(2019-2020-ஆம் ஆண்டிற்கு) மானிய விலையில் இருசக்கர வாக னங்கள் வழங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வயது வரம்பு குறைந்தது 18 முதல் அதிகபட்சமாக 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தில், முக்கிய வருமானம் ஈட்டுபவராகவும், வருட வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இரு சக்கரவாகன விலை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ 25,000 வரை மான்ய தொகை பயனாளி களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். விண்ணப்பிக்கும் பயனாளிகள் உரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பயனாளிகள் வாங்க கூடிய வாக னம் 1.1.18 பிறகு தயாரிக்கப்பட்டு அதிகபட்சம் 125 சிசி திறன் உடைய ஆட்டோகியர் மற்றும் கியர் இல்லாத இருசக்கர வாக னம் மட்டுமே வாங்கப்பட வேண்டும். இதற்காக, 20-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஊரகப் பகுதிகளில் 14 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகர்ப்புற பகுதிகளில் 16 பேரூராட்சி அலுவலகங்கள், 3 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 4 மண்டல அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பப்படிவம் தொடர்புடைய அனைத்து அலுவல கங்களிலும் இலவசமாக வழங்கப்படும். கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கத் தேவை யில்லை. உரிய விதிமுறைகளுக்குட்பட்டு பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ 30-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் மேற்கண்ட அலுவலகங்களுக்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

;