அறந்தாங்கி, மார்ச் 6- புதுக்கோட்டை மாவட்டம் பெரு நாவலூரில் உள்ள அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் கணித வேடிக்கை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் தலை மை வகித்து பேசினார். கணிதத்துறை தலைவர் பி.கிளாடிஸ் வரவேற்றார். மாணவ- மாணவிகளுக்கு கணிதம் தொடர்பான ரங்கோலி வரைதல், வினாடி வினா உள்பட பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நூறு சதவீத தேர்வு முடிவுகள் கொடுத்த பேராசிரியர்கள் தமிழ்த்துறை எஸ்.மேனகா, ஆங்கிலத்துறை ஏ. நவீன் பாலாஜி, தமிழ்த்துறை பழனி துரை, கணிதத்துறை கிளாடிஸ் ஆகி யோருக்கு சிறப்பு பரிசு வழங்கப் பட்டது. நிறைவாக முன்றாம் ஆண்டு மாணவி வினோதினி நன்றி கூறினார்.