tamilnadu

img

மணிமேகலை பள்ளி 91-வது ஆண்டு விழா

மன்னார்குடி, ஏப்.6-

மன்னார்குடி மணிமேகலை நடுநிலைப்பள்ளியின் 91-வது ஆண்டு விழா வௌ்ளியன்று நடைபெற்றது. மன்னார்குடி வட்டாரக் கல்வி அலுவலா் இரா.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ப.அறிவழகன், முனைவா் தெ.இராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியர் ஜெ.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். ஆண்டறிக்கையை உதவி ஆசிரியை கோ.ப.உஷா வாசித்தார். மரு.எஸ்.தர்மராஜ் அரிமா சங்க மாவட்டத் தலைவர் பி.மோகன்தாஸ், மணிமேகலை நடுநிலைப்பள்ளி தாளாளர் செ.செகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை ஜேசிஐ மன்னை சார்பாக ஜேசிஐமன்னைத் தலைவா் வேதா.முத்தமிழ்ச் செல்வம் வழங்கினார். முன்னாள் மண்டலத் தலைவர் வி.எஸ்.கோவிந்தராஜன், மன்னை ஜேசிஐ முன்னாள் தலைவா்கள் எஸ்.கமலப்பன், வி.ராஜேர் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் எம்.இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் ஜேசிஐ மன்னை செயலா் வி.வினோத் நன்றி கூறினார்.

;