பொது மருத்துவ முகாம்
திருச்சிராப்பள்ளி, ஆக,9- திருச்சி மாநகராட்சி நான்கு கோட்டங்களிலும் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரை பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் கோட்டம் 13 வது வார்டு படிப்பகம் அரபிக்குல தெரு. அரியமங்கலம் கோட்டம் 61 வது வார்டு, காவேரி நகர் நாடார்மஹால், காட்டூர்.(சித்த மருத்துவ முகாம்) அரியமங்கலம் கோட்டம் 29 வது வார்டு, சத்துணவு மையம் திடீர்நகர் மேலஅம்பிகாபுரம். பொன்மலை கோட்டம், 38 வது வார்டு, சாத்தனூர் மருந்தகம், கே.கே.நகர். கோ.அபிசேகபுரம் கோட்டம், 45 வது வார்டு சத்துணவு மையம் ,தெற்கு தெரு ,கருமண்டபம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையில் மசால்ஜி காலிப் பணியிடம்
புதுக்கோட்டை, ஆக.9- புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள மசால்ஜி காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர்-1, ஆதிதிராவிடர் அருந்ததியினர்(பெண்) முன்னுரிமை பெற்றவர்(ஆதரவற்ற விதவை)-1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமை பெற்றவர்-1, பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமை பெற்றவர்-1, பொதுப்போட்டி(பெண்) முன்னுரிமை அற்றவர்(ஆதரவற்ற விதவை)-1, ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர்-1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்(பெண்) முன்னுரிமையற்றவர்(ஆதரவற்ற விதவை)-1, பிற்படுத்தப்பட்டோர்(பெண்) முன்னுரிமையற்றவர்(ஆதரவற்ற விதவை)1, பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர்-1 என மொத்தம் 9 ஆகும். விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் எழுதி புகைப்படத்துடன் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம், உரிய சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் எந்த இனசுழற்சிக்கு விண்ணப்பம் செய்கிறார் என்பதையும் குறிப்பிட்டு 22.08.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை- 622005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.