tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்

திருச்சிராப்பள்ளி,ஜூலை. 18- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் வேண்டுகோ ளுக்கிணங்க கோப்டிரஸ்ட் நேசக் கரங்கள் சார்பில் மணிகண்டம் ஒன்றியம் வண்ணாங்கோவில் உள்ள ஒளிஇல்லத்தில் 205 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட ரூ.1200 மதிப்புள்ள நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் கோட்;ட சப்கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் கோப் டிரஸ்ட் நேசக் கரங்கள் நிறுவனர் அருட்தந்தை, சேசுசத்தியநாதன், அருட்தந்தை கள் சபரிராஜ், அந்தோணிசாமி, ஆலிஸ், சகாயராஜ்,தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், மணி கண்டம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜார்ஜ்பெர்னான் ட்ஸ், பாரதிதாசன், துரை, அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.