tamilnadu

நீட் தேர்வு ரத்து அறிவிப்பு போல் ஹைட்ரோகார்பன் அறிவிப்பை விட்டு விடக் கூடாது தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

 திருச்சிராப்பள்ளி, பிப்.11- தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் திருச்சியில் செவ்வாய் அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தி யாளர்களை சந்தித்த மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பை நிறைவேற்றவில்லை. அதே போல டெல்டா மாவட்டங்கள் பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என்கிற அறிவிப்பை நிறைவேற்றாமல் விட்டு விட கூடாது. சட்ட மன்றத்தில் இது குறித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே எங்களின் முழு நன்றி யை தெரிவிப்போம்.  விவசாயிகளுக்கு ரூ 5 லட்சம் வரை வட்டி யில்லா கடன் வழங்கப்படும் என்கிற அறி விப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் மாதம் முதல் வாரம் தில்லி சென்று அமித்ஷா வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதே போல விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளு படி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முத லமைச்சர் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றார். 

;