புதுக்கோட்டை, நவ.15- கஜா புயல் நிவாரண பணிகளை ஒரு ஆண்டு ஆகியும் முறையாக மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி வீசிய கஜா புயல் புதுக் கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சா வூர் மாவட்டங்களை கடுமையாகத் தாக்கியது. கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு ஒதுக்கியதாக சொல்லப்பட்ட வீடுகளை இதுநாள் வரை கட்டிக் கொடுக்கப்படவில்லை. சேதமடைந்த வீடுகளும் சரிசெய்யப் படவில்லை. பாதிப்படைந்த விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வில்லை. \
பாதிக்கப்பட்ட அனைத்து வீடு களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை. அரசு உறுதியளித்த எந்த வாக்கு றுதியையும் முறையாக நிறைவேற்றா ததைக் கண்டித்தும், உடனடியாக நிறைவேற்றக் கோரியும் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பி.விமல்துரை தலைமை வகித்தார். பொருளாளர் பி.இளங்கோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா பேசினார். முடித்து வைத்து மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றியச் செயலாளர் ஏ.குமாரவேல், முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடி வேல், என்.தமிழரசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரபு, சின்னமணி, அழகர், கார்த்தி, நடராஜன், கனகராஜ், பாலா, தினகரன் உள்ளிட்டோர் பேசினர். ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.சர வணன் நன்றி கூறினார்.