tamilnadu

img

பாதுகாப்புத் துறையை தனியார்மயமாக்குவதா? அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன மான பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலை களை கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நுழைவு வாயில் முன் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்து பேசுகையில், பாதுகாப்புத்துறை உற் பத்தியை படிப்படியாக தனியார் வசம் ஒப்ப டைக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்படும் இந்த கார்ப்பரேட் மயமாக்குதல் என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும்.  லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறு வனங்கள் பாதுகாப்புத்துறையில் நுழைய முயற்சிக்க காரணம் பாதுகாப்புத்துறைக்காக ஒதுக்கப்பட்டு வரும் மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கீட்டை குறி வைத்துதான். இந்திய, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை பாது காப்புத்துறையில் அனுமதித்தால் நமது ராணு வம் மற்றும் பாதுகாப்புத்துறை மிகப்பெரிய ஊழல் ராஜ்யமாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஐஎன்டியுசி, தொமுச, அம்பேத்கர் யூனியன், பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகி களும், தொழிலாளர்களும் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

;