tamilnadu

img

உணவு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்

நாகப்பட்டினம், ஜூன்23- நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நெய்தல் கோடை விழாவையொட்டி கடைகளில் பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை பாதுகாப்பானதாக உள்ளனவா? என்பதனை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கு.வரலெட்சுமி, நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் மற்றும் கீழையூர் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.ஆண்டனி பிரபு ஆகியோர் ஆய்வு செய்தனர். மண் மற்றும் தூசுகள் உணவின் மீது படியாமல் பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய வேண்டும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது, ஐஸ்கிரீம் விற்பனையில் அனுமதிக்கப்படாத நிறமிகளைப் பயன்படுத்தக் கூடாது என உணவு விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.