tamilnadu

img

ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.18-  மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் தர்ஹா மைதானத்தில் அருகில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நாகை சட்டமன்ற உறுப்பி னரும், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலப் பொதுச் செயலாளருமா கிய எம்.தமீமுன் அன்சாரி, மே.17 இயக்கம் மாநில ஒருங்கிணைப்பா ளர் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலப் பேச்சா ளர் பழனி ஃபாருக், தமிழ் விடு தலைப்புலி கட்சி குடந்தை அரசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

மாநாட்டில், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்த மாட்டோம் என்று எதிர்த்து தீர்மா னம் நிறைவேற்றியதை போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம்,  அலிகார் பல்க லைக்கழகம், ஜே.என்.யூ ஆகிய பல் கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வரும் மாணவர்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயி ரக்கணக்கான மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை வன்மை யாக கண்டிப்பது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டடன.   நிகழ்ச்சிக்கு, மாநாடு ஒருங்கி ணைப்பாளர்கள் மதுக்கூர் பவாஸ்கான் தலைமை வகித்தார். மதுக்கூர் ராவுத்தர்ஷா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை, சேக் அஜ்மல் தொகுத்தளித்தார். நிறை வில், இம்தியாஸ் நன்றி கூறினார். முன்னதாக, விதைகள் கலைக்குழு, சி.எப்.ஐ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 2,500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று  குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக் கோரி விளக்குகளை எரிய விட்டு முழக்கமிட்டனர்.

;