tamilnadu

img

நியூஸி.,க்கு எதிரான டி-20 போட்டி இந்திய அணி அசத்தல் வெற்றி

நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம்  ஆக்லாந்தில் வெள்ளியன்று நடைபெற்றது.  டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய நியூஸிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சொதப்ப நியூஸிலாந்து அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் ருத்ரதாண்டவம் ஆடி னர். காலின் முன்ரோ (59), ராஸ் டெய்லர் (54), கேப்டன் வில்லியம்சன் (51) ஆகியோரின் அசத்தலான  அரை சதத்தின் உதவியால் நியூஸிலாந்து அணி 20 ஓவர் களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. 

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தி லேயே ரோஹித் ஷர்மவை (7) இழந்தது. பொறுப்பை உணர்ந்த கேப்டன் கோலி நிதானமாக ரன் சேர்க்க மறுபக்கம் ராகுல் அதிரடியாக ரன் குவித்து அரைசத மடித்து அசத்தினார். ராகுல் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அடுத்த சில நிமிடங்களில் கோலியும் (45) பெவிலியன் திரும்பினார்.       அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே (13) வந்த வேகத்தில் வெளியேறியதைப் பற்றி கவலைப்படாமல் ஷ்ரேயஸ் ஐயர் நியூஸிலாந்து வீரர்களின் பந்துவீச்சை துவைத்தெடுத்தார். மணீஷ் பாண்டே (14) விக்கெட்டு கள் நிதானமாக ரன் சேர்க்க  ஷ்ரேயஸ் (58) அரை சதமடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியுடன் டி-20 தொடரில் முன்னிலை பெற்றது.

;