tamilnadu

img

விபத்தில் சிக்கிய நூறு நாள் வேலை பணியாளர்கள்  நிவாரணத் தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை பேச்சுவார்த்தையில் முடிவு

திருச்சிராப்பள்ளி, மே 30-திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளுர்ப்பட்டி ஊராட்சிபாலசமுத்திரம் மக்கள் 40 பேர் நூறு நாள் வேலைத்திட்டத் தில் பணிபுரிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில்காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும்நாட்களை கணக்கிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் இருந்துவீடு திரும்பி வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் தொழிலாளர் களுக்கு எம்என்ஆர்ஜிஇஏ சட்டப்படி 50 சதவீதம் ஊதியம்வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள்சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தொட்டியம் ஒன்றிய கிளை சார்பில் புதனன்று தொட்டியம் பிடிஓ அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தைவிளக்கி விதொச மத்தியக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டச்செயலாளர் பழநிசாமி, மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், தவிச மாவட்டச் செயலாளர் சிதம்பரம் ஆகியோர் பேசினர்.விதொச மாவட்ட துணைத்தலைவர் வீரவிஜயன், ஒன்றியச்செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாலசமுத்திரம் பகுதி மக்களுக்கு அப்பகுதியிலேயே நூறு நாள் வேலைதிட்டத்தில் வேலை வழங்குவது, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு கூலி வழங்க அரசிற்கு பரிந்துரைசெய்வது, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம்தொகை வழங்க பரிந்துரை செய்வது என முடிவானது. இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

;