பெரம்பலூர், ஜூலை 31- பெரம்பலூர் உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உட்கோட்டத் தலைவர் கே. மணிவேல் தலைமை வகித்தார். சாலைப் பணியாளர்களுக்கு அரசு உத்தரவுப்படி அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41-மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.5,200-ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீத விபத்துப்படி வழங்கிட வேண்டும். நிரந்தர பயணப்படி, சீருடை, சலவைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். திருச்சிராப்பள்ளி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டதலைவர் தேவானந்தம் தலைமை வகித்தார்.