திருவாரூர், ஜூலை 31- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் 33- விஸ்வநாத புரத்தில் வசி த்து வருபவர் சின்னப்பன் மனைவி வசந்தா(52). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாய கூலி த்தொழிலாளி. இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் விலையில்லா பசு வழங்கப்பட்டது. இந்த பசு மாடு நோயால் இறந்து விட்டது. இதற்கான இன்சூரன்ஸ் தொகை பயனாளி வசந்தாவிற்கு கிடை க்கவில்லை. இதற்காக சமந்தப்பட்ட துறைகளில் மனு செய்திருந்தார். உரிய நடவடிக்கை இல்லாததால் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்முயற்சியில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. அவர் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு அறிவுறுத்தியதின் பேரில் தற்போது புதிதாக விலையில்லா பசுவினை இத்திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிதாக வாங்கி வசந்தாவிடம் வழங்கி யுள்ளனர். தீக்கதிரில் செய்தி வெளியானதின் பின்னணியில் விரை வான நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.