தஞ்சாவூர், ஜூன் 11- காவிரியில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரை பெற்றுத் தரவும், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்க உத்தரவிட்ட தண்ணீரை குறுவை சாகுபடிக்கு உடனடியாக வழங்கிட வும், மத்திய மாநில அரசுகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாநில துணைத் தலைவர் கே.முக மது அலி ஆகியோர் சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ. கோவிந்தசாமி, பி.எம்.காதர் உசேன், என்.கணேசன், கே.முனி யாண்டி, எஸ்.ஞானமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாலதி, என்.சுரேஷ் குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.அபி மன்னன், சிபிஎம் மாநகரச் செயலா ளர் என்.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வம், கே. ராமசாமி, மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் ஜி.அரவிந்த்சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பூதலூர் வடக்கு கே.காந்தி, பூத லூர் தெற்கு சி.பாஸ்கர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதன்பின் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் கே.முக மதுஅலி செய்தியாளர்களிடம் கூறி யதாவது: ‘குறுவை பாசனத்திற்கு மேட்டூ ரில் தண்ணீர் திறப்பதற்கான அறி குறிகள் இல்லை. கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் உத்த ரவிட்டபடி, ஏப்ரல், மே, ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுத்து வருகிறது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீரை தருவதாக காவிரி ஆணையத்திடம் ஒப்புக் கொண்டு சென்ற பொதுப்பணித்துறை அதி காரிகள் கர்நாடகம் சென்ற பிறகு மறுப்பு அறிக்கை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழகத்தை காவிரி விவகாரத்தில் ஆளும் கர்நாடக காங்கிரசும், பா.ஜனதாவும் மாறி மாறி வஞ்சித்து வருகிறது. 1870 ஆம் ஆண்டு முதல் நமது உரி மைக்காக போராடிக் கொண்டி ருக்கிறோம். தற்போது குறுவைக் கும், குடிநீருக்கும் கர்நாடக அரசு தண்ணீரை விரைந்து திறக்க வேண்டும். அவ்வாறு திறக்க மறுத் தால் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என்றார்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்கத்தின் வேதா ரணியம் ஒன்றியத் தலைவர் பி.எஸ். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் சிறப்புரையாற்றி னார். சி.பி.எம்.வேதாரணியம் ஒன்றி யச் செயலாளர் வி..அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் மா. முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.