tamilnadu

img

கஜா புயல் வாழ்வாதார திட்டப் பணிகள் ஆய்வு

தஞ்சாவூர் செப்.15- கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் இப்பகுதியில் உள்ள தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்து விழுந்தும், கொண்டை திருகியும் சேதமடைந்தன. இதனா‌ல் தென்னை விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தென்னை விவசாயிகள் மறுவாழ்வுக்காக சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. பல இடங்களில் புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.  இதனை தென்னை வளர்ச்சி வாரிய துணை இயக்குநர் பாலசுதாகரி, காசர்கோடு சிபிசிஆர்ஐ இயக்குநர் சுப்ரமணியன், வேளாண் துணை இயக்குநர்(தென்னை) பொன்மலர், வேளாண் துணை இயக்குநர்(மாநில திட்டம்) ஜஸ்டின் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இக்குழுவினர், புலவஞ்சியில் விவசாயி கோவிந்தன், மதுக்கூர் வடக்கில் விவசாயி ஞானசேகரன் நடவு செய்துள்ள தென்னங்கன்று மற்றும் விக்ரமம் விவசாயி ஆசைதம்பி கஜா வாழ்வாதார தொகுப்பு திட்டத்தில் தென்னங்கன்று நடவு செய்து, நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்ட வயலையும் ஆய்வு மேற்கொண்டனர். மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் கலைசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் சுரேஷ்,ஜாகிர் உசேன், ஜெரால்ட், கார்த்திக், முருகேஷ் ஆகியோர் செய்தனர். 

;