tamilnadu

தேசிய ஊரக வேலை திட்டத்தில் நிதி மோசடி?

விசாரணை நடத்தக் கோரிக்கை

தஞ்சாவூர், பிப்.28- இடையாத்தி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்ட போது நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்ட விழிப்பு ணர்வு அமைப்பான, பத்து ரூபாய் இயக்க தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் இடையாத்தி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த காந்தாராவ் மற்றும் இடை யாத்தி கிராம மக்கள் தஞ்சை ஆட்சியரை சில தினங்களுக்கு முன் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள் ளனர்.  அதில் அவர்கள் கூறியிருப்பதா வது: தஞ்சாவூர் மாவட்டம்,  திருச் சிற்றம்பலம் அருகே இடையாத்தி ஊராட்சி உள்ளது. இவ்வூராட்சியில் கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டு களிலும்   தேசிய ஊரக வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடைபெற்ற பணிகள் குறித்து, மத்திய அரசின் மேற்கண்ட நிதியாண்டிற்கான சமூக தணிக்கை அறிக்கைகள் திட்டத்தின், அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், கடந்த 3 ஆண்டுகளில், பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளிலும், 22 கோடியே 21 லட்சத்து 97 ஆயிரத்து 732 ரூபாய் முறை கேடுகள் நடைபெற்றுள்ளது கண்டறி யப்பட்டுள்ளது. இடையாத்தி ஊராட்சியில் மட்டும் 1 கோடியே 73 லட்சத்து 04 ஆயிரத்து 767 ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிதி மோசடிகள் குறித்து விரிவான தணிக்கை அறிக்கைகளை மத்திய அரசு,  மாநில மாவட்ட ஒன்றிய வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, பேராவூ ரணி ஒன்றியம் இடையாத்தி ஊராட்சி யில்  தேசிய ஊரக திட்டத்தில் நடை பெற்றுள்ள நிதி மோசடிகளில் ஈடுபட்ட வர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென” அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

;