tamilnadu

பயிர் விளைச்சல் போட்டிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன.14- பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விவசாயிகள் விண்ணப் பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சி யர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் மாநில அளவில் பாரம் பரிய நெல் இரகங்களை பாதுகாத்து பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. எனவே பயிர் விளைச் சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயனடைய லாம். மாவட்டத்தில் விவசாயிகள் பாரம் பரிய நெல் இரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். பாரம்பரிய நெல் இரகங்க ளை பாதுகாத்து அதிகளவு உயர் விளைச்சல் எடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவ லர் விருது வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் இரகங்களை சாகு படி செய்யும் விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள ரூ.100 செலுத்தி தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிர் விளைச்சல் போட்டியில்  கலந்து கொள்ள 30.04.2020 கடைசி நாளாகும். பதிவு செய்த  விவசாயிகளின் வயலில் வேளாண்மை இயக்குநர் அல்லது அவர்களின் பிரதிநிதி, மாவட்ட ஆட்சி யர் அல்லது அவர்களின் பிரதிநிதி,  அங்கக சான்றளிப்புத் துறை  உறுப்பி னர் ஆகியோர் முன்னிலையில் அறு வடை செய்து பெறப்படும் மகசூல் விப ரங்களின் அடிப்படையில், பரிசு வழங்கப்படும்.  மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் தேர்வு பெற்ற விவசாயிகளு க்கு முதல் பரிசாக ரூ.1,00,000 மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000 மும் மூன்றாம் பரிசாக ரூ.50,000 மும் தமிழக அரசால்  வழங்கப்படும். எனவே புதுக் கோட்டை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் இரகங்களை சாகுபடி செய்து பாது காத்து வரும் விவசாயிகள் இப்போட்டி யில் கலந்து கொள்ள தாங்கள் சாகுபடி செய்துள்ள பாரம்பரிய நெல் இரகம், நடவு தேதி மற்றும் உரிய நில ஆவனங்க ளுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். 

;