tamilnadu

img

மதுக்கடை திறக்க அனுமதிக்கக் கூடாது

 தஞ்சை ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் வெள்ளிக் கிழமை மாதர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலை மையில் பொதுமக்கள் அளித்த  கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது, “தஞ்சாவூர் சாந்தப் பிள்ளை கேட், கல்லணைக் கால்வாய் மேல்கரையில், திருச்சி- நாகை சாலையில் எலைட் மதுபா னக் கடை மற்றும் பார் திறக்க ஏற் பாடுகள் நடைபெற்று வருகின் றன. கலால் துறை அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் இங்கு பார்வையிட்டு, குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.  மேல்கரையில் 150, கீழக்கரை யில் 200 ஆக 350 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், வேலைக்கு செல்வோர் என ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பள்ளிகள், கோயில், தேவாலயம் உள்ளது. மதுக்கடை திறக்கப்பட்டால், சமூக அமைதி பாதிக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே ஆட்சியர் இதுபற்றி உரிய நடவ டிக்கை எடுத்து மதுக்கடை திறக்க அனுமதிக்கக் கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.   அப்போது தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செய லாளர் என்.குருசாமி, மாதர் சங்க நிர்வாகி இ.வசந்தி, வி.மோகன், ஜெ.சசிகுமார், அம்பிகா, ஜெயந்தி, நளினி பிரியா, சரசு வதி உள்பட அப்பகுதி மக்கள் உடனிருந்தனர்.

;