tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெத்தனாட்சிவயல் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஊரணி சுகாதாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை- இனிப்பு வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கௌரவத் தலைவரும், முன்னாள் பேரூராட்சி தலைவரான என்.அசோக்குமார் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், வட்டார தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, சகுந்தலா, ஊமத்தநாடு ஊராட்சி மன்ற தலைவர் குலாம்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சங்கப் பொருளாளர் ராஜூ வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட பொறியாளர் ராமசாமி, மாணவர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கிப் பேசினார். தலைமை ஆசிரியர் பானுமதி, சங்கத்தின் தலைவர் அப்துல்மஜீத், துணைத் தலைவர் ராமசாமி, செயலாளர் ஆனந்தராஜ், சுகாதார ஆலோசகர் டாக்டர் வி.சவுந்தரராஜன், இணைச் செயலாளர் சரவணன், பிரதீபா லெனின்குமார், மக்கள் தொடர்பாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சபரி முத்துக்குமார், சேதுபாவாசத்திரம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சாஜிதா, ஆசிரியை பரமேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் கதிரேசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கருப்பையன், வார்டு உறுப்பினர் குமார், கிராம மக்கள் சிவன்ராஜ், கார்த்திக் ராஜா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அமுதா கலந்து கொண்டனர்.

;