tamilnadu

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்க!

பெரம்பலூர், ஜூன் 12- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகி கள் கூட்டம் துறைமங்கலத்திலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.  கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு முடிவுகள் குறித்து மாவட்டச் செய லாளர் என்.செல்லதுரை விளக்க வுரையாற்றினார்.  பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை வட்டம் மளையாளப் பட்டி அருகே உள்ள சின்னமுட்லு என்ற இடத்தில் நீர்த்தேக்கம் அமைக்க வலியுறுத்தி விவசாயி களும் பொதுமக்களும் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசு மேற்படி திட்டத்தை ஆய்வு செய்வதற்கு ரூ.39 கோடி ஒதுக்கியது. இதில் நில அளவை செய்து கல் நடும் வேலையை மட்டும் செய்தது. தற்போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  வரும் சட்டமன்ற கூட்டத் தொட ரில் தமிழக அரசு ஏற்கனவே அறி வித்தபடி 128 கோடி ரூபாயை ஒதுக் கீடு செய்து நீர்த்தேக்கம் கட்டும் பணியை துவக்க வேண்டும். தமி ழகத்திலேயே பெரம்பலூர் மாவட் டத்தில்தான் மக்காச்சோளம் பயி ரிடும் விவசாயிகள் அதிகம் உள்ள னர். கடந்த ஆண்டு பயிரிட்ட மக்காச் சோளம் அமெரிக்க படைப்புழுவால் தாக்கப்பட்டதில், விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள தால் நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் பாதிக்கப் பட்ட விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அதன் விளைவாக தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 410 ரூபாயும் நஞ்சையில் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 10 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணம் வழங்கு வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்படாததால் விவ சாயிகள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. எனவே அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் குடி நீர் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, வறட்சி நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.