tamilnadu

img

விவசாயம், பொதுத்துறையை  பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி: தியாகிகள் தினத்தையொட்டி பொதுத்துறைகள் மற்றும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 21,000 வழங்க வேண்டும். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறு அன்று திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் சிஐடியு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.சிவராஜ் தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி விதொச மாநிலத் தலைவர் ஏ.லாசர், விதொச மாவட்டச் செயலாளர் ஏ.பழநிசாமி, தவிச மாவட்ட செயலாளர் வி.சிதம்பரம் ஆகியோர் பேசினர். சிஜடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.சம்பத், தவிச மாவட்ட தலைவர் பி.ராமநாதன், விதொச மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட தலைவர் ஜே.சுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் எஸ்.தெய்வநிதி, துணை செயலாளர் கண்ணண் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விதொச மாவட்ட துணை செயலாளர் எ.கனகராஜ் நன்றி கூறினார்.

;