திருச்சிராப்பள்ளி, பிப்.14- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கல்லூரி மாணவர்கள் கிளை சார்பில் திருச்சி பீமநகர் மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் டார்வின் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கிளை பொருளா ளர் ஜெ.அசன் முகமது ரியாஜ் தலைமை வகித்தார். திருச்சி நகர சரக வட்டாரக் கல்வி அலுவலர் சி. அருள்தாஸ் நேவிஸ் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் எம்.மணி கண்டன் அறிவியல் செயல்பாடு களை செய்து காண்பித்து துவக்க வுரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சீத்தா, டார்வின் கருத்துரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம் முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சி.சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார். முன்ன தாக தலைமை ஆசிரியர் து.ராஜ ராஜேஸ்வரி வரவேற்றார். இடை நிலை ஆசிரியர் மு.நர்கீஸ் நன்றி கூறினார். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.