திருச்சிராப்பள்ளி, ஆக.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டத்தின் தொட்டியம் தாலு காக் குழு கூட்டம் ஒன்றியக் குழு உறுப்பி னர் மாரிமுத்து தலைமையில் வியாழ னன்று நடைபெற்றது. கூட்டத்தில் புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், ராமநாதன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தொட்டியம் ஒன்றியச் செயலாளராக எஸ்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். தொட்டியம் ஆரம்ப சுகாதார நிலை யத்தை முறையாக நடத்த வேண்டும். தொட்டியத்தில் இருந்து கரூர் மாவட்டம் லாலாபேட்டை வரை காவிரி ஆற்றில் தடுப் பணை கட்டக்கோரி நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகன பிரச்சார பயணம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.