திருச்சிராப்பள்ளி, ஆக.20- கொரோனா தொற்றை கட்டுப் படுத்த வேண்டும். மாதம் ரூ.7,500 நிவா ரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக அறிவித்து ரூ. 600 தினக் கூலி வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன் றிய குழு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மக்கள் சந் திப்பு இயக்கத்திற்கு ஒன்றியச் செயலா ளர் நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரவி, தெய்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் கும்பகோணம் நகரத் தில் கும்பகோணம் ஒன்றியம் கிராமம் தோறும் துவங்கியது. பிரச்சார இயக் கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செய லாளர் பி.ஜேசுதாஸ், அறிவு ராணி, பக்கிரிசாமி உள்ளிட்ட கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அரியலூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் உதய நத்தம் கிராமத்தில் தா பழூர் ஒன்றி யச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலை மையில் இயககம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கண்ணபிரான், தங்க ராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகரம் பள்ளியக்ர ஹாரம் பம்பிங் ஸ்டேஷன் பகுதியில், பொது மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதே போல் வடக்கு வாசல் கிளையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகரச் செய லாளர் என்.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.சிவகுரு, சரவணன், ராஜன், மாநகருக்குழு உறுப்பினர்கள் சி.ராஜன், நசீர், வடிவேலன், கரி காலன், கிளைச் செயலாளர் வடுக நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.