tamilnadu

img

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் பேரவைக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 29-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக்குழு மற்றும் ஒன்றியக் குழுக்கள் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பரிசீலனை முடிவுகள் குறித்த விளக்கப் பேரவைக் கூட்டம் திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.இராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்தும், எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழல் குறித்தும் பேசினார்.  மாவட்ட செயற்குழு சி.ஜோதிபாசு, கே.என்.முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பினரகள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், தெற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பி.என்.தங்கராசு, ஆர்.வேதையன், டி.எஸ்.மணியன், வி.ரவி, ஏ.கே.வேலவன், வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வி.டி.கதிரேசன், நகரக்குழு உறுப்பினர்கள் கு.வேத ரெத்தினம், கே.கோபு, எஸ்.தண்டபாணி, எம்.ஜெயபிரகாஷ், ஏ.கே.செல்வம், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பி.நடராஜன், மாதர் சங்க நகர செயலாளர் கோதாவரி, தமுஎகச மாவட்ட பொருளாளர் மா.சண்முகம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.