தஞ்சாவூர், ஜூன் 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை தொடக்க விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகரம், பள்ளியக்ரஹாரம் 1 ஆவது வார்டில், சிபிஎம் கிளை தொடக்க விழா கிளைச் செயலாளர் கென்னடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகரச் செயலாளர் என்.குருசாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கட்சிக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாநகரக்குழு உறுப்பினர்கள் ராஜன், துரை, கிளைச் செயலாளர்கள் எம்.ராஜன், வடுகநாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஹரிபிரசாத் மற்றும் ஜெனிபர், சதீஷ்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.