மன்னார்குடி, ஜூன் 5- ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தலைவர்களில் ஒருவரும் திருவாரூர் மாவட்டத்தின் மக்கள் தலைவருமான தோழர் என்.மணியன் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கோட்டூர் ஒன்றியத்தில் கடைபிடிக்கப்பட்டது. தோழர் என்.மணியன் சொந்த கிராமமான இருள்நீக்கியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எல்.சண்முக வேலு தலைமை வகித்தார். கட்சிக் கொடியை தோழர் என்.மணியன் இல்லத்திற்கு எதிர்புறம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா, தோழர் என்.மணியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் அறிவின் செல்வன், ஜோதிபாசு, என்.எம்.சண்முகசுந்தரம் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.