tamilnadu

img

தென்னை விவசாயிகள் முற்றுகை

மன்னார்குடி, ஆக.26- கஜா புயல் சூறையாடி எட்டு மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் அளிக்காத மாநில அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து தொடர் முற்றுகை போராட்டம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்’கு பி.வி.கனகசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஜி.துரைராஜ், ஆர்.வீரமணி, என்.ராஜேந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஆர்.வைரகணபதி, சிபிஎம் நகர செயலாளர் சி.செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டு தென்னை விவசாயிகள் எஸ்.சாமிநாதன், கே.ராஜ்மோகன், என்.சுப்பிரமணியன், வி.சண்முகம், ஜி.நந்தகுமார், கே.ராஜ்குமார், எல்.டி.ராஜேந்திரன் பேசினர்.  இதைதொடர்ந்து வேளாண் துறை உதவி இயக்குநர் ரவீந்திரன் அங்கு வந்து விவசாயிகளிடம் இருந்து 665 கோரிக்கை விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு மனுக்களை பரிந்துரை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவதாக கூறினார். இதையடுத்து தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஏ.விஜயமுருகன் சிறப்புரையாற்றி போராட்டத்தை முடித்து வைத்தார்.

;