tamilnadu

img

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா கொடியேற்றம்

தஞ்சாவூர், அக்.18- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் ஆவணம் சாலை முக்கம், புதிய பேருந்து நிலையம், திருச்சிற்றம்பலம், பேராவூரணி, ஒட்டங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமை வகித்தார்.  மாவட்டக்குழு உறுப்பினர்  ஆர்.வாசு கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

சேதுபாவாசத்திரம் 

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கழனிவாசல், கொரட்டூர், பெரியகத்திக்கோட்டை, கீழ மணக்காடு, மேல மணக்காடு, ரெட்டவயல் ஆகிய இடங்களில் கட்சிக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையா முன்னிலை வகித்தார்.  பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கட்சி அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில், மூத்த தோழர் கே.ராஜகோபால் கொடி ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். 

பூதலூர் வடக்கு 

பூதலூர் வடக்கு ஒன்றியம் முல்லைக்குடி, ஒரத்தூர், மைக்கேல்பட்டி, மாறனேறி, பவனமங்கலம், தோகூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நூற்றாண்டு விழா கொடியேற்று விழா நடைபெற்றது. பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

;