tamilnadu

img

செலக்சன் பள்ளி குழும விழா

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக் சன் கல்வி குழுமத்தின், 19ம் ஆண்டு பரிசளிப்பு விழா வியாழ னன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சி.கன்னையன் தலைமை வகித்தார்.  ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின், மன மேல்குடி கடலோர காவல் உதவி ஆய்வாளர் ஜவஹர், வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கன்னையன் அறந்தாங்கி ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, விஜயாதுரைராஜ், முன்னாள் செயலாளர்கள் ரவிசங்கர், செந்தமிழ்செல்வன் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வீராச்சாமி உள்ளிட்டோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். முன்னதாக பள்ளி முதல்வர் க.சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். நிறைவாக துணை முதல்வர் மெரைன் நன்றி கூறினார்.