தூத்துக்குடி,மே 23தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதை யடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம் உட்பட 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் . வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வியாழனன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் கனிமொழி ஆரம்பம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது அவர் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வெற்றி உறுதியானதையடுத்து திமுக வேட்பாளர் கனிமொழி, கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.