tamilnadu

சாதி ஆணவ படுகொலையை  தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

 திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- சாதிய ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும். படுகொலை செய்யும் கூலிப்படை கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொட ரும் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளியன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலாளர் நீல வாணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், மாநில துணை செய லாளர்கள் ரமேஷ்குமார், பிரபாகரன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் அருள் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.