tamilnadu

img

திருச்சி: விசிக பிரமுகரை தாக்கிய பாஜக நிர்வாகி  

திருச்சியில் தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை பாஜக நிர்வாகி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி வடக்கு தாரநல்லூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சதாசிவம் என்பவர் இ.பி.ரோட்டில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் திருச்சி மாவட்ட பாஜக எஸ்.டி பிரிவு தலைவராக உள்ளார்  இந்நிலையில் இருவரும் இ.பி ரோடு வேதாத்திரி நகரில் உள்ள பூங்கா அருகே நின்ற கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.  இந்த தகராறில் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகி பாஸ்கர், விசிக பிரமுகர் சதாசிவத்தை தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த சதாசிவம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைதொடர்ந்து சதாசிவம் அளித்த புகாரின் அடிப்படையில் பாஸ்கர் மீது வழக்குப்பதிந்து கோட்டை போலீசார் கைது செய்தனர்.