tamilnadu

img

மின்துறையை பாதுகாக்க அனைத்து சங்கத் தொழிலாளர், விவசாயிகளை திரட்டி போராடுவோம் ராஜேந்திரன் பேச்சு

திருச்சிராப்பள்ளி, நவ.23- மின்சாரத் துறையை தனியார் மய மாக்குவதால் கிராமப்புற ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச குடிசை மின்சாரம், நகர்ப்புற வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட், விவசாய பம்புச் செட்டுக்கு வழங்கப்படும் இலவச மின்சா ரம் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மின்சாரம் ரத்தாகும். கிராமப்புறங்களுக்கு மின் வினியோகம் கிடைக்காது. சிறு, குறு தொழில்கள் நலிவடையும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகும். மின் வாரியத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உரிமை கள் பறிபோகும் நிலை உருவாகும். எனவே மின்சார துறையை தனியார் மய மாக்கும் மின்சாரத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில துணைத்தலைவர் ராஜாராமன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிதம்பரம், மாநில துணை பொதுச்செய லாளர் ராஜா சிதம்பரம், மாவட்ட தலைவர் சின்னதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், தமிழகத்திற்கு தினமும் 16,872 மெகா வாட் மின்சாரம் தேவை. ஆனால் 15,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப் படுகிறது. தமிழகத்தில் போதுமான மின் உற்பத்தி இல்லை என்பதை கூற மாநில அரசு மறுக்கிறது.  மின் உற்பத்தியை பற்றி சிந்திக்கா மல் மின்வாரியத்தை தனியாரிடம் கொடுக்கிறார்கள். இதனால் 80 லட்சம் இலவச மின் இணைப்புகள் ரத்தாகும். மானியங்கள் கிடைக்காது. மின்சாரம் முழுக்க முழுக்க சந்தை பொருளாக மாறும். மின் கட்டணத்தின் விலை உயரும். மேலும் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். எனவே மின்துறையை பாது காக்க அனைத்து சங்க தொழிலா ளர்களையும், விவசாயிகளையும் திரட்டி போராடுவோம் என்றார். தொமுக மாநில துணைத்தலைவர் மலையாண்டி, பொறியாளர் ஐக்கிய சங்க திட்டச் செயலாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் கழக திருச்சி மண்டல செயலா ளர் விக்ரமன், தொழிலாளர் சம்மேளன தலைவர் சிவசெல்வம், டிஎம்எஸ் மாநில துணை பொதுச்செயலாளர் தேவராஜ், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் பஷீர், டிஎன்பிஇஓ மாநில துணை பொதுச் செயலாளர் இருதயராஜ், சிஓடிஇஇ முன்னாள் மாநிலச் செயலாளர் கோவிந்த ராஜ், வட்டச் செயலாளர்கள் கலைச்செல் வன், காணிக்கை ராஜ், தனபால், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டலச் செயலாளர் அகஸ்டின் வரவேற்றார். திருச்சி பெருநகர் வட்டச் செயலாளர் செல்வராசு நன்றி கூறினார். 

;