tamilnadu

img

ஆக்கூர் ஓரியண்டல் பள்ளி நிகழ்ச்சி

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், ஆக்கூர் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் கிராமப்புற மாணவர்களுக்கான பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சந்திரபாடி அரசு உயர்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஓரியண்டல் பள்ளி மாணவர்களுடன் இணைந்து அப்பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாட முறைகள், இயற்பியல், வேதியியல், உயிரி யியல் ஆய்வு கூடங்களில் எவ்வாறு சோதனை மூலம் கற்பிக்கப்படுகிறது என்பதை பற்றியும் அறிந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் இக்ரம் ரசூல் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தி உரையாற்றி னார். பின்னர் மாணவர்களிடையே விளையாட்டு போட்டிகள், தனித் திறன்களை வெளிப் படுத்தும் நிகழ்ச்சிகள் தலைமையாசிரியர் ஷாஜகான் மேற்பார்வையில்  8 ஆம் வகுப்பு ஆசிரி யர்கள் அப்துல் கபூர், ரெலினா பானு, விஜயலெட்சுமி, ஜெகபர் சித்தீக், நசீரா பானு, உடற்கல்வி ஆசிரியர் ஷாஜகான் ஆகியோர் சந்திரபாடி பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து மாணவர்க ளுக்கு விளக்கினர். செம்பனார்கோவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்ரமணியன், ஆசிரிய பயிற்று நர் அருணாதேவி ஆகியோர் உடனிருந்தனர். களப்பயணமாக ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆல யத்திற்கு சென்று அதன் வரலாற்றை மாணவர்களிடம் விளக்கினர். நிறைவாக சந்திரபாடி ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.

;