tamilnadu

img

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுக! நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுத்திடுக!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு 

தஞ்சாவூர், ஜன.31- தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாசகர ஹைட்ரோகார்பன் திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் அனுமதிக்கக் கூடாது. இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.  இதையடுத்து கூட்ட அரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வைத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லர் என்.வி. கண்ணன் கூறுகையில், காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். சுற்றுச் சூழலை பற்றி கவலைப்படாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் காவிரி டெல்டா பாலைவனமாகும் சூழல் ஏற்படும். எனவே காவிரி டெல்டாவை பாது காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மக்கள் குரலை மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது மிகப் பெரிய போராட்ட மாக மாறும். அதற்கு முதல்கட்டமாக இந்த வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.  முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில், விவசாய சங்க நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: 

“காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, ஆய்வுக் கிணறு கள் அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற விதி முறையை மாற்றி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள் ளது. இது டெல்டா விவசாயிகள் வாழ்க்கை யில் விளையாடுவதோடு, டெல்டாவை பாலை வனமாக்கும் செயல்பாடாகும். தற்போது நடைபெற்று முடிந்த பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில், ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு, ‘ஹைட்ரோ கார்பன் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டங்களும் வேண்டாம்’ என தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.  எனவே மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து, மத்திய அரசு தான் எடுத்துள்ள தவறான முடிவுகளை கைவிட வேண்டும். டெல்டா வை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும்.  அரசு நேரடி நெல்  கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை யின் போது விவசாயிகள் பல்வேறு பிரச்சனை களை சந்திக்கிறார்கள். நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்திட மூட்டைக்கு ரூ.30, 40 என முன்கூட்டியே பணம் கொடுத்தால் தான் நெல் கொள்முதல் செய்யப்படும் அவல நிலை உள்ளது. 

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக் காட்டில் விவசாயிகளிடம் நிர்ப்பந்தித்து  பணம் பெறப்படுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். இது உதாரணமே. பெரும்பாலான கொள் முதல் நிலையங்களில் இதுதான் நிலைமை. ஆட்சியர் உரிய தலையீடு செய்து முறைகேடு களை தடுக்க வேண்டும்.  சமீபத்தில் பெய்த மழையில் நெல் அறு வடை பணிகள் பாதிக்கப்பட்டன. புகையான் நோய் தாக்குதல், ஆனைக் கொம்பன் நோய், நெற்பழ நோய் தாக்கம் போன்றவற்றால் நெல் பதராகி, மகசூல் பல இடங்களில் மிகக்குறைவாக உள்ளது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் பயிர் காப்பீட்டிற்கான மகசூல் இழப்பீடு கணக்கிடும் பணியில், விவ சாயிகளின் பாதிப்பை கவனத்தில் கொண்டு முறையாக மதிப்பீடு செய்திடவேண்டும்.  கடந்த ஆண்டு கணக்கீடு செய்த குறை பாட்டால், பூதலூர், கோவில்பத்து உள்ளிட்ட பல கிராமங்களில் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஏரி, குளம், வாய்க்கால்க ளில், இந்த ஆண்டு தாமதமின்றி உரிய காலத்தில் தூர்வாரும் பணியை துவக்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”  இவ்வாறு அம்மனுவில் கூறப்பட் டுள்ளது.
 

;