tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,006 பசுமை வீடுகள்

புதுக்கோட்டை, ஜன.23- புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 12,006 பசுமைவீடுகள் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள் ளதாக மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். திருமயம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப் பணி கள் ஆய்வுக்குப்பிறகு அவர் தெரிவித்தது: ஏழை, எளிய மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் முதல மைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டம் பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 13,060 பசுமை வீடுகள் ரூ.262 கோடி மதிப்பீட்டில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதில் 12,006 வீடு கள் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப் பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள் ளது. மீதமுள்ள 1,054 பசுமை வீடுகள் கட்டும் பணி விரைவில் நிறைவு பெற உள்ளது.  நீர் பாசன வசதியை பெருக்கி பொது மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்டத்தில் முதற்கட்ட மாக பேரையூர், கே.பள்ளிவாசல், துலை யானூர் ஆகிய 3 ஊராட்சிகளில் 4 சமுதாய பொது கிணறுகள் ரூ.42.88 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 20 தனிநபர் கிணறு கள் தலா ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.1.20 கோடியில் மதிப்பீட்டில் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 16 பணிகள் முடிவடை ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். நிகழ் வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலமுரளி, வட் டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;