அகர்தலா:
மத்தியில் 2047-ஆம் ஆண்டு வரை மோடி ஆட்சிதான் நடைபெறப் போகிறது என்று பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், இதுபற்றி ராம் மாதவ் மேலும் கூறியிருப்பதாவது:மக்களவைத் தேர்தலில் பாஜவுக்கு 6 கோடி புதிய வாக்குகள் உட்பட 23 கோடி வாக்குகள் கிடைத்துள்ளன. நாடு சுதந்திரமடைந்தது முதல் 1977-ம் ஆண்டு வரை வேறுஎந்த கட்சியும் அல்லாமல் காங்கிரஸ் மட்டுமே ஆட்சி நடத்தியது. 27 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்ததே தற்போதுவரை சாதனையாக உள்ளது. ஆனால் இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடிப்பார்.நாடு சுதந்திரமடைந்ததன் நூற்றாண்டு விழாகொண்டாடும் 2047-ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடியின் ஆட்சி தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ள நாங்கள், 2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம். அனைவருக்கும் வீடு வழங்குவது எங்களின் முக்கிய இலக்கு. வேலை வாய்ப்பின்மை பிரச்சனைக்குத் தீர்வு காண்பது பாஜக அரசின் இரண்டாவது இலக்கு.இவ்வாறு ராம் மாதவ் கூறியுள்ளார்.