சின்னாளபட்டி, ஜூன்14- திண்டுக்ல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக் கூட்டம் தலை வர் பரமேஸ்வரி தலைமையில் நடை பெற்றது துணைத் தலைவர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் பங் கேற்ற உறுப்பினர்கள் பலர், மக்களை சந்திக்க தனி அறை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் முனி யாண்டி மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயகர், பெனினா தேவி சரவணன், தனலட்சுமி மோகன், முருகபாரதி சுந்தர், சக்திவேல, அறிவு, பிச்சை, விஜயகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.