tamilnadu

img

6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வருமான வரித்துறை ஊழியர்கள் வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜன.11 மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்ப டாமல் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென திண்டுக்கல்லில் நடை பெற்ற வருமான வரித்துறை ஊழியர்கள் சங்க 12-ஆவது மாநில மாநாடு வலி யுறுத்தியுள்ளது.  சனிக்கிழமை தொடங்கிய மாநாட்டில் சந்தானம் கொடியேற்றினார். சங்கத் தலை வர் மீராபாய் தலைமை வகித்தார். மதுரை வருமான வரித்துறை அதிகாரி ராஜிவ் விஜய் நபார் மாநாட்டை துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய அரசு ஊழியர் சம்மே ளனத்தின் பொதுச்செயலாளர் துரைப் பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநாட்டின் நோக்கம் குறித்து பொதுச் செயலாளர் வெங்கடேசன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் அந்த தந்த  மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வருமானவரித் துறையில் தற்காலிக பணியாளர்களாக பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை நிரந்த ரம் செய்ய வேண்டும்.  56-ஏ  சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ஐந்து கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டுமென்றார். மாநாடு சனிக்கிழமையன்று நடைபெற்றது.

;