tamilnadu

img

சுசில்காஜல் லக்கீம்பூர்  விவசாயிகளின் மரணமே பாஜக சவப்பெட்டியின் கடைசி  ஆணிகள்

அரியானாவின் சுசில்காஜல் மரணமும், உத்தரபிரதேசம் லக்கீம்பூர் விவசாயிகளின் மரணமும் பாஜக ஒன்றிய அரசின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணிகள் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் விஜுகிருஷ்ணன் பேசியுள்ளார். 
திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பாக இன்று ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய  அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் விஜுகிருஷ்ணன் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் சார்பாக ஜுன் 2020ல் போராட்டம் ஆரம்பித்த போது போராடுவோம். போராடுவோம் வெற்றி கிட்டும் வரை போராடுவோம் என்று கோஷமிட்டோம். மோடி அரசாங்கத்திற்கு அது புரியவில்லை. ஒரு வருடமாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் மிகக் கடுமையான வெயில்,  குளிர்,  மழை காரணமாக  700க்கும் மேற்பட்ட  விவசாயிகள் தங்கள் இன்னுயிரை ஈந்து காலமானார்கள். இந்த போராட்டத்தின் தியாகிகளானார்கள். அவர்களது மரணத்திற்குக் காரணம் இந்த மோடி அரசாங்கமும் பாரதீய ஜனதா கட்சியும் தான்.  
டெல்லி சலோ என்ற கோஷத்தை ஏற்று லட்சக்கணக்கான விவசாயிகளும்,  விவசாயத் தொழிலாளர்களும் பஞ்சாபிலிருந்தும்,  அரியானாவிலிருந்தும்,  புறப்பட்டு டெல்லியை முற்றுகையிட்டனர். மோடி அரசு இந்த போராட்டத்தை ஒடுக்க தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்களை தோண்டியது. ஷிப்பிங் கண்டெய்னர்களைக் கொண்டு வந்து ஜல பிரங்கிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். லத்தி சார்ச் செய்தார்கள். ஆனாலும் பாஜக ஒன்றிய அரசின் அடக்குமுறைகளை முறியடித்து ஒராண்டாக விவசாயிகள் போராட்டத்தில் உறுதி காட்டினர். டெல்லி நகரைச்சுற்றியுள்ள சிங்கூர்,  திக்ரி,  பல்வல், காசிப்பூர்,  ஷாஜகான்பூர், மேவாத் என 6 எல்லைகளிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் விவசாயிகளும் விவசாயித் தொழிலாளர்களும்,  தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்கள். அதனால் இந்த வெற்றியில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் டெல்லியைச் சுற்றி 5 லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்களில் விவசாயிகளும்,  விவசாயத் தொழிலாளர்களும் பங்கேற்றனர். அந்த அளவிற்கு சுதந்திர இந்திய வரலாற்றில் அப்படி ஒரு குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடியிருக்க முடியாது. அந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் சங்கபரிவாரமும், பாஜகவும் குழப்பம் விளைவிக்க பார்த்தன. போராட்டத்திற்கு எதிராக பாஜக அரசு காங்கிரீட் சுவர் கட்டியது. மின்சாரத்தையும்,  குடிநீரையும்,  வலைதளத்தையும்  துண்டித்து போராட்டத்திற்கு இடையூறு செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தது. 
லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது காரை ஏற்றி 4 விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரையும் கொலை செய்தது பாஜக அரசு. அரியானாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற தடியடியில் அம்மாநிலத்தைச் சேர்ந்த  சுசில்காஜல் கொலை செய்யப்பட்டார். ஆனால் போராட்டம் தொடர்ந்தது. சுசில்காஜலுடைய குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் தர வேண்டும். அவரது குடும்பத்தில் உள்ள 2 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று போராடினர். அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அந்த போராட்டம் வெற்றி பெற்றது. 
பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின் போது சைமன் கமிசனே திரும்பிப் போ என்று போராடிய லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்தி கொல்லப்பட்டார். அது போன்ற சம்பவம் சுசில்காஜல் மீது நடைபெற்ற தடியாகும். சுசில்காஜல் இறப்பதற்கு முன்பு என்னுடைய மரணம் பாஜக அரசின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் கடைசி ஆணி என்றார். லக்கீம்பூர் விவசாயிகள் மரணமும்,  சுசில்காஜல் மரணமும் பாஜக ஒன்றிய அரசின் சவப்பெட்டிக்கு அடிக்கப்படும் ஆணி என்பதில் சந்தேகமில்லை. அச்சமில்லை அச்சமில்லை என்று இந்திய நாட்டின் விவசாயிகளும் தொழிலாளர்களும். எங்கள் எதிராளிகள் இதயத்தில் பயத்தை விதைத்தால் இந்த வெற்றி கிடைத்தது. இது ஜனநாயகத்தின் வெற்றி. உங்களது வெற்றி. உங்கள் எல்லோருக்கும் லால் சலாம் சொல்லி விடைபெறுகிறேன். இவ்வாறு விஜுகிருஷ்ணன் பேசினார்.
 

;