tamilnadu

img

கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது கஷ்டம்....   தமிழக அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்....

திண்டுக்கல்:
கிராமத்தில் படித்த மாணவர்கள் மாணவிகள், மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது. நீட் தேர்வு எழுதுவது கஷ்டம் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-மாவட்டம் முழுவதும் 3,356 பெண்களுக்கு திருமணநிதி உதவி 14 கோடி, தாலிக்குத் தங்கம் 10.20 கோடி மதிப்பில் 27 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகச்சிறப்பான மாநிலம். மொத்தம் பதினொரு மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. திண்டுக்கல்லில் சுமார் ரூ.400 கோடி செலவில் மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.  மருத்துவக் கல்லூரி களில் சேர  நீட் தேர்வைமத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வின் மூலமாக கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது. நீட் தேர்வு எழுதுவது கஷ்டம். இதை உணர்ந்துதான் 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி ஏழை- எளியவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் 313 ஏழை-எளிய மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர் என்றார்.

;