பழனி ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடுகள் நடக்கிறது. தார்சாலையின் மூலப்பொருட்கள் தரமாக இல்லை. சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தார் சாலையை தரமாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.