tamilnadu

போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மோசடி

திண்டுக்கல், ஆக.3- திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகேயுள்ள மாவூத்தன்பட்டி யைச் சேர்ந்த காமாட்சி என்பவருக்கு காமாயி, சோலாயி ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி சோலாயிக்கு ராணி, செல்லத்துரை ஆகியோர் வாரிசுகள். செல்லதுரை அம்மையநாயக்கனூர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்று கடந்த 2012-ஆம் ஆண்டு காலமானார். ஆசிரியர் செல்ல துரை சுயமாக சம்பாதித்து வாங்கிய 35 சென்ட் நிலத்தை  செல்லதுரையின்  பெரியம்மா  வாரிசுகள் நான்கு பேர் போலி யாக பத்திரங்கள் தயாரித்து சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ராஜகோபால் மனைவி மீனாட்சிக்கு விற்பனை செய்துள்ளனர்.  போலி ஆவணங்கள் தயார் செயது கொடுத்த கிராம அதிகாரி  , நிலக்கோட்டை முன்னாள் வட்டாட்சியர், சார்பதிவாளர் ஆகியோர் மீதும் செல்லதுரையின் உறவினர்கள் மீதும் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் செல்லதுரையின் சகோதரரி ராணி, ராணியின் மகன் சரவணன், தலித் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் கருப்பையா ஆகி யோர் புகாரளித்துள்ளனர்.