tamilnadu

img

கன்னிவாடி சிபிஎம் கவுன்சிலர் தர்ணா

கன்னிவாடி பேரூராட்சியில்  சிபிஎம் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் துப்புரவுப் பணியாளர்களின் அன்றாட வருகைப் பதிவேட்டை கணக்கெடுத்து எந்தெந்த வார்டுகளில் யார் யார் அன்றைய பணிகளை செய்ய வேண்டும் எந்தெந்த பணிகள் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் காலை 6 மணிக்கும் அதே நாளில் மதியம் 2 மணிக்கும் வருகைப் பதிவேடு எடுப்பது வழக்கம்.
அதே போல் வெள்ளி யன்று காலை செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர், தலைமை எழுத்தர், துப்புரவு மேற்பார்வையாளர்கள் தான் வருகைப் பதிவேடு கணக்கெடுக்க வேண்டும். ஆனால் பேரூராட்சி தலைவர் தனலெட்சுமி, அவரது கணவர் வருகைப் பதிவேடு எடுக்கிறார்கள் என்று சிஐடியூ துப்புரவு பணியாளர்கள் சிபிஎம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சக்திவேலிடம் கூறியதின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சக்திவேல் நீங்கள் எப்படி கணக்கு எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் அப்படித்தான் எடுப்போம் என்று கூறியதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கன்னிவாடிப் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் தனலெட்சுமிசண்முகம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ஜெய மாலு முன்னிலை வகித்தார். கூட்டம் ஆரம்பித்தவுடன் 1 ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் மணிமாலதி பொருள் எண் 1ல் இருக்கும் தீர்மானத்தை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது  பேரூராட்சி தலைவர் தனலெட்சுமி சண்முகத்திற்கும் மணிமாலதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தீர்மான நகலைக் கிழித்தெறிந்து மணிமாலதி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்

 

;