tamilnadu

img

கன்னிவாடியில் வாலிபர்கள் ரத்த தான முகாம்

திண்டுக்கல்:
வ.உ.சிதம்பரனார் பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னிவாடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 40 பேர் பங்கேற்றனர். 21 பேர் ரத்த தானம் செய்தனர்.திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை
ரத்த வங்கிப் பொறுப்பாளர் டாக்டர் பிரபாகரன், வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டத்தலைவர் விஷ்ணுவர்த்தன், ரத்த தான கழக அமைப்பாளர் நிருபன்பாசு, ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் நந்தகுமார், ஒன்றியத்தலைவர் நாகார்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;