tamilnadu

கொடைக்கானலில் சிறுமி பாலியல் பலாத்காரம்

திண்டுக்கல்:
கொடைக்கானல் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. கொடைக்கானலில் பழங்குடியின சிறுமியை பழனி பகுதியைச் சேர்ந்த கிராமஊராட்சி உறுப்பினர் பிறை சொக்கர் பாலாஜி ஒரு மாதத்திற்கு முன்பு பாலியல் வன் கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல்நிலையத்;தில் புகார் கொடுத்துள்ளார். பிறை சொக்கர் பாலாஜி மீது போக்சோ சட்டம், தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன் கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிறை சொக்கர் பாலாஜி கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் மெத்தனப்போக்கால் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடைக்கானல் ஒன்றியச்செயலாளர் செந்தாமரை, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் திண்டுக்கல் மாவட்டத் துணைத்தலைவர்கள் கே. அருள்செல்வன்.எம்.குருசாமி ஆகியோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாவிடம் முறையிட்டனர். தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்க மாவட்டச்செயலாளர் எம்.செல்லையா, மாவட்டப் பொருளாளர் பொன்னுச்சாமி ஆகியோர் கொடைக்கானல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்தனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பிறைசொக்கர் பாலாஜியை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரது ஊராட்சி மன்ற பதவியை மாவட்ட நிர்வாகம் பறிக்க வேண்டும். போக்சோ மற்றும்தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டுமென தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.       (ந.நி.)

;