tamilnadu

தேனீக்கள் கொட்டி  விவசாயி பலி

நத்தம், மே 28- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மூங் கில்பட்டியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (51). விவசாயி. இவர் புதன்கிழமை மாலை அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகிலி ருந்த மரக்கிளையிலிருந்து கூட்டமாக தேனீக்கள் கலைந்து வந்து சங்கர லிங்கத்தை சரமாரியாக கொட்டியுள்ளன. அலறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த னர். செல்லும் வழியில் அவர் உயிரி ழந்தார். நத்தம் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.