tamilnadu

img

திண்டுக்கல் மார்க்கெட்டில் 100 டன் வெங்காயம் தேக்கம்

திண்டுக்கல்: 
திண்டுக்கல் வெங்காய பேட்டையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெங்காய விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் 100 டன் வெங்காயம் தேக்கம் அடைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:

திண்டுக்கல்  வெங்காய பேட்டை திங்கள் ,புதன், வெள்ளி என வாரத்தில்  மூன்று தினங்கள் நடைபெறும். இந்த பேட்டைக்கு  தேனி, கம்பம் ,வேடசந்தூர் , ஒட்டன்சத்திரம், தாராபுரம், எரியோடு உள்ளிட்ட. பல பகுதிகளில் விளையும் வெங்காயத்தை விற்பனைக்காக இங்கு கொண்டு வருவார்கள்.

இந்த வெங்காயத்தைகேரளா,சென்னை, திருச்சி போன்ற மாவட்டத்தில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.  திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில்  சுமார் 400 டன்  வெங்காயம் விற்பனை ஆகும். ஆனால் சமீப காலமாக கொரோனா  பரவலையொட்டி 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு காரணமாக வெளி மாநில மற்றும் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள்   யாரும் இங்கு வரவில்லை.
மேலு ம் ஹோட்டல்கள், திருமணங்கள், ஹாஸ்டல், கோயில் திருவிழாக்கள் போன்றவை நடைபெறாத காரணத்தால் இங்கு வரக்கூடிய 400 டன் வெங்காயத்தில் தற்போது 100 டன் வெங்காயம் தேக்கமடைந்து அழுகும் சூழ்நிலை உள்ளது.

கடந்த  வாரம் ரூ. 25க்கு  விற்பனையான பெரிய வெங்காயம் ரூ.10 மற்றும்  15 க்கும் கிலோ ரூ. 65 க்கு விற்பனை ஆன   சின்ன வெங்காயம் கிலோ ரூ.15   குறைந்து 50 க்கு விலை வீழ்ச்சி  அடைந்துள்ளது
 இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வெங்காயம் விலை  கடுமையாக வீழ்ச்சி அடைவது மட்டுமின்றி அழுகிய நிலைக்கு சென்று விடும் அபாயம் உள்ளது. எனவே அரசும் அரசு அதிகாரிகளும்  வெங்காய விற்பனை செய்ய எந்த தடையும்  இல்லாமல் வழி வகுக்க வேண்டும் என வியாபாரிகளும் விவசாயிகளும்  கேட்டுக்கொண்டனர்.
 

;